கடலோரகவிதைகள் – அடி ஆத்தாடி.
படம் : கடலோரகவிதைகள்
பாடல் : அடி ஆத்தாடி.
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பங்காரா
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி
—
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ …
—
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே …
—
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி ஆத்தாடி
=====
காக்கிச்சட்டை – வானிலே தேன்னிலா
படம் : காக்கிச்சட்டை
பாடல் : வானிலே தேன்னிலா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: குருவிகரை சண்முகம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
—
வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோடமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே?
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
—
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
—
பூவை போலே தேகம் மாறும் தேவதை
பார்வை போடும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் வீணையே
மன்னன் தோள்மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன்மேகமே மூடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஒவியம் தீட்டுதே
—
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
=====
காதலுக்கு மரியாதை – இது சங்கீத
படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : இது சங்கீத
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : பவதரணி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
—
கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை
—
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
—
நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஒவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையவேன்
இவள் ஆடும் பொன் ஊஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்
—
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன ஆசையில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே
இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
=====
காதலுக்கு மரியாதை – என்னை தாலாட்ட
படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : என்னை தாலாட்ட
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
=====
காதல் பரிசு – கூ கூ என்று
படம் : காதல் பரிசு
பாடல் : கூ கூ என்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சை தோடும் இன்னிசை குயில்
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சை தோடும் இன்னிசை குயில்
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
—
வானம் கை நீடும் தூரம் எங்கெங்கும்
எங்கள் ராஜாங்கம் ஆகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்
வானம் கை நீடும் தூரம் எங்கெங்கும்
எங்கள் ராஜாங்கம் ஆகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்
கல்யாணமோ?
தேனாரு கொஞ்சம் பாலாரு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம்
—
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சை தோடும் இன்னிசை குயில்
கூ கூ
என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
—
கூந்தல் பாய் போடு தோலில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே
கூந்தல் பாய் போடு தோலில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே
மேகங்களே?
என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்
—
கூ கூ
என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
கூ கூ
என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சை தோடும் இன்னிசை குயில்
இந்த குயில்
எந்த ஊர் குயில் நெஞ்சை தோடும்
இன்னிசை குயில்
No comments:
Post a Comment