Tuesday, 29 August 2017

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா"


"விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும் உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்: அருமை - “கெளரி மனோகரி”  ராகத்தில் டூயட் மெலோடி.....

பாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நின்று சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்த பாடல்.

"அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு.

மணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.

இந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும், அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கித்திய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும், ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.

இணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும், புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆஹா அற்புதம்...

பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஹம்மிங்குடன் அழகு....இந்தப் பாடலில் அவர் பாடும் விதம், மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்..

இதோ உங்களுக்காக!

பாடல்:அதிகாலை நிலவே
திரைப்படம்:-உறுதி மொழி-1990
இசை:- இளையராஜா;  இயற்றியவர்:-ஆர் வி உதயக்குமார் ;
பாடியவர்:ஜெயசந்திரன்,S.ஜானகி
~~~~~~~~~~~~~~~~
*பாடல் வரிகள்:* *ஆண்...* அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
*பெண்...* இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..

அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீ பாடவா

🎼🎹🥁🎸🎷🎺🎻

*ஆண்...* மணி குருவி உனை தழுவ மயக்கம் பிறக்கும்
*பெண்...* பருவ கதை தினம் படிக்க கதவு திறக்கும்
*ஆண்...* மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
*பெண்....* பருவ கதை தினம் படிக்க கதவு திறக்கும்..

*ஆண்...* விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
*பெண்...* உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
*ஆண்...* நமை வாழ்த்த வழிதேடி தமிழும் தலை குனியும்

*பெண்...* அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீ பாடவா
*ஆண்...* இசை தேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே
உயிரே..
அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா

🎼🎹🥁🎸🎷🎺🎻

*பெண்...* அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
*ஆண்...* ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு
*பெண்...* அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
*ஆண்...* ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு

*பெண்...* தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன்
என் உயிரே..
*ஆண்....* இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன்
என் உயிரே..
*பெண்...* சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்

*ஆண்...* அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
*பெண்....* இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..
அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீபாடவா..



Sunday, 27 August 2017

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு



இன்றைய இசையமுது...#HBD #RAJKIRAN SIR

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு
கொண்டாந்து தாரேன் நல்ல மாங்காய் பிஞ்சு (வீணை)

தங்கம் வைரம் எல்லாம் வயிற்றில் சுமந்திடும் தங்கமே
இந்த செல்வம் போதும் இனியும் நமக்கென்ன பஞ்சமே
புள்ளதாச்சி உன்னைப் போலே அதிர நடப்பது ஆகுமா
கண்ணை மூடி கவலை நீங்கி எனது மடியினில் தூங்கம்மா

தாயாக போகுமுன்னே தாலாட்டுப் பாடும் அன்னை
நானன்றி வேறு இங்கு யாரம்மா
நானன்றி வேறு இங்கு யாரம்மா......(வீணை)

ரோசா நாத்து நீயும் கரிசல் நெலத்துல வாடுறே
ராசா வீட்டுப் பொண்ணு
வறுமை சிறையிலே வாழுற
மண்ணின் வாசம் மனசில் வீசும்

பொறுமை உடையவள் நீயம்மா
உன்னைப் பார்த்து உருகிப் போச்சு
இரும்பு மனசொன்னு பாரம்மா
ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு எந்நாளும் துன்பப்பட்டு
வேறென்ன கண்ட தாயி என்னிடம்
வேறென்ன கண்ட தாயி என்னிடம்

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட இங்கு வந்து சேர்ந்தது
விளையாடி வேதனையை தீர்க்குது
தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு
தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு (வீணை)

Friday, 25 August 2017

அன்புள்ள ரஜினிகாந்த் - தேன் பூவே பூவே வா

திரைப்படம்       : #அன்புள்ள_ரஜினிகாந்த்
இசையமைப்பு : #இளையராஜா
பாடலாசிரியர்  : #வாலி
பாடகர்        : #எஸ்_பி_பாலசுப்ரமணியம்
பாடகி         : #எஸ்_ஜானகி            
பாடல்         : #தேன்_பூவே_பூவே_வா
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
ஆண் :
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

இசை                                       சரணம் - 1

ஆண் :
பனி விழும் புல் வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்

பெண் : கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்

ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

பெண் : ஹோ... கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

ஆண் : தேவ தேவி என்னோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

ஆண் : பூந்தேனே தேனே வா தாகம் கூட

இசை                                    சரணம் - 2

பெண் : இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்

ஆண் : அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்

பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும் போது

ஆண் : ஆ... ஹஹஹ காதல் யோகம் தான் கட்டில் மீது

பெண் : காண வேண்டும் உன்னோடு தான்

ஆண் :
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

பெண் :
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா

பெண் : லால்ல லால்லா...

இருவர் : லா... லால்லா லால்லா லா லால்ல லால்லா...

Sunday, 20 August 2017

திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்



திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்

ஜானகி அம்மாவின் பாடல்களிலேயே மிக உன்னதமானது இந்த பாடல். கேட்கும் ஒவ்வொரு  முறையும் மனம் நிர்மலமான நிலையை அடைந்து விடுகிறது. சோக ரசத்தை இந்த அளவு அனுபவித்து பாடிய பிறிதொரு பாடல் தமிழில் இல்லை. ராஜாவின் மேன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி.

எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார்.

"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். இந்த இரு பாடல்களும் ஒரே ராகம் .

பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து

"தூரத்தில் நான் கண்ட உன் முகம் ; நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.

பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.

"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.

தூரத்தில் நான் கண்ட உன் முகம் :ஒரு சோக கீதம் ;இதோ உங்களுக்காக!



பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்
திரைப்படம்:- நிழல்கள்-1980; இசை:- இளையராஜா; பாடலாசிரியர்:- பஞ்சு அருணாச்சலம்; பாடியவர்:- S.ஜானகி, கதை, வசனம்:- மணிவண்ணன்; இயக்குனர்:- P. பாரதிராஜா.
~~~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேங்குழல் நாதமும் கீதமும் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் என்னும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா...
மீரா...மீரா...மீரா...மீரா...மீரா..
வேளை வரும்போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்

இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைனவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் அறிந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்.

Monday, 14 August 2017

நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள்



நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள்

14/08/2016 ஓஜஸ் சித்ரா ,
திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார் ,
நிவாஸ் பிரசன்னா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி
நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.
இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.
தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.
கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர் ’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.
யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது
சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.
ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.
நா முத்துகுமார் அஞ்சலி
பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி
கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி
தூரமே தூரமாய்
போகும் நேரம்
கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்
போகும் நேரம்
ஆச விலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?
குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே
வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்
கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…
கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா
ya Nambeesan | Nivas K Prasanna
இசைப்பா+
நா.முத்துகுமார் தன் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்
1. ஆனந்த யாழை… – தங்க மீன்கள்
2. அழகே… அழகே… – சைவம்
மேலும் அவரது பாடல்களுடன் இணைய, சொடுக்கவும்
நா மு பாடல்கள்
Rate this:
10/05/2014 BHANI உத்ரா உன்னிகிருஷ்ணன் , ஜி.வி.பிரகாஷ் ,
திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார்
அழகே அழகே….
நண்பர்களுக்கு இசையுடன் நல்வணக்கம்,
இன்று காணவிருக்கும் பாடல் உன்னிகிருஷ்ணன் அவர்களின் புதல்வியான உத்ரா உன்னிகிருஷ்ணன் அவர்களின் மழலை ததும்பிய குரலில் பாடப்பெற்ற பாடல். பாடல் இடம் பெற்ற படம் “ சைவம் ” , பாடல்-“ அழகே அழகே ” என அழகாக தெளிவாக பாடியிருக்கிறார் உத்ரா உன்னிகிருஷ்ணன். ஜி.வி .பிரகாஷ் இசையை பாராட்ட வேண்டும் கண்டிப்பாக, பின் வாத்தியங்கள் அனைத்தும் அருமை.பாடல் வரிகள் எளிமையாக சின்ன சின்ன வரிகளாக அருமையாக அமைத்து இருக்கிறார் நா.முத்துக்குமார். குரலில் என்ன மாயமோ Loopல் கேட்க செய்கிறது. பாடலின் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்பின் விழிகளில் காணும் அனைத்தும் அழகே என்றும்,
சுடும் வெயில் அழகு, விழும் இலை அழகு.. .
என ஒரு பட்டியல் போட்டு இயற்கையோடு இணைதல் அழகு என அருமையாக வரிகள் அமைத்து இருக்கிறார் பாடலாசிரியர். வாங்களேன் பாடலை ரசிப்போம்.
படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்
அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !
……..
குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !
……
அழகே அழகே எதுவும் அழகே
…….
இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்…
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே !?
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே…
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு !
அழகே அழகே…..
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மையில் அதுதான் விழியாய் அழகு !
Azhagu Song From Saivam
இனியதோர் பாடல்களுடன் மீண்டும் சந்திப்போம் !
Rate this:
21/01/2014 தமிழ் சி.சத்யா ,
திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார் ,
மதுஸ்ரீ
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
வணக்கம்.
நீண்ட இடைவெளியாகிவிட்டது. எதிர்பாராத சூழல் காரணமாக தொடர்ச்சியாக இயங்க இயல்வில்லை. இப்பாட்லும் முன்னமே வெளிவந்திருக்க வேண்டிய பாடல். ஆனாலும் பரவாயில்லை. இசைப்பா வில் இதுவரை அறிமுகம் ஆகாத கலைஞர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்யத் திட்டம். அந்த வரிசையில் இசையமைப்பாளர் சி.சத்யா. இந்த பாடல் மூலம் அறிமுகமாகிறார். எங்கேயும் எப்போதும் படம் மூலம் அறிமுகமாகி சென்ற ஆண்டில் மட்டும் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதைய அஇளம் இசையமைப்பாளர் வரிசையில் இவரும் ஒருவர்.
கவிஞருக்கு பாடல் எழுதிய அனுபவங்கள் ஏராளம் என்பது நிதர்சனம். இப்பாடல் மிகக் குறைவான நேரத்திலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கும் என்றே கருதுகிறேன். கதாநாயகி நாயகனைக் கண்டவுடன் மறக்கிறாள். எதை மறக்கிறாள்? அவனைத் தவிர யாவையும் மறக்கிறாள்! அவ்வளவுதான் பாட்டு! இப்பாடலை பாடகி மதுஸ்ரீயுடன் இணைந்து இப்பாடலை சி. சத்யாவும் பாடியுள்ளார்.
படம்: இவன் வேற மாதிரி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: சி.சத்யா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, சி.சத்யா
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே!
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே!
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்?
ஓஓஓஓஒ!
ஏன் என்னை மறந்தேன்?
நான் என்னை மறந்தேன்.
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….
என் மனம் கவரும் ஒற்றைப் பேர்!
தாள் பணிந்தேன்…. தாள் பணிந்தேன்
படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….
இசைப்பா +
பாடகி மதுஸ்ரீயின் இயற்பெயர் சுஜாதா பட்டாச்சார்யா
Rate this:
27/09/2013 தமிழ் இளையராஜா ,
கார்த்திக் , சுனிதி சௌகான் , சூரஜ் ஜெகன் , திரைப்பாடல்கள்,
நா.முத்துக்குமார் , பெலா ஷிண்டே ,
யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே
நீதானே என் பொன்வசந்தம்- முழுப்பாடல்கள்
வணக்கம்.
இம்மாதம் முழுக்க வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் பாடல்களின் முழுத் தொகுப்பு இங்கே. ஒவ்வொரு பாடலையும் தனியே கேட்க/காணொளியை ரசிக்கவோ, அப்பாடலின் lyrical video -வைக் காணவோ இங்கே செல்லலாம்.
படத்தின் அனைத்து பாடல்களுக்கும்,
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.
பாடல்: வானம் மெல்ல
பாடியவர்கள்: இளையராஜா, பெலா ஷிண்டே
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே!
தூறல் தந்த வாசமெங்கும் வீசுதிங்கே!
வாசம் சொன்ன பாஷை என்ன? உள்ளம் திண்டாடுதே!
பேசிப் பேசி மௌனம் வந்து பேசுதிங்கே!
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம்… தருணம்
(வானம் மெல்ல)
அன்று பார்த்தது!
அந்த பார்வை வேறடி! இந்த பார்வை வேறடி!
நெஞ்சில் கேக்குதே!
துள்ளி துள்ளி ஓடினேன். வந்து போன காலடி!
கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஹோ!
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
எங்கேயும் இன்ப துன்பம் நீ தானே!
உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே!
அந்த காற்றை நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்து
காதல் காப்பேனே!
(வானம் மெல்ல)
பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோணுது
மீண்டும் பேசி இணையுது
பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது
அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே
நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
கண்கள் உள்ள காரணம்?
உன்னை பார்க்க தானடி!
வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க
எந்தன் கண்கள் போதாதே!
(வானம் மெல்ல)
பாடல்: காற்றைக் கொஞ்சம்
பாடியவர்: கார்த்திக்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி தைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா? என்றேன்
(காற்றைக் கொஞ்சம்…)
நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சினுள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும் உன்னை
எண்ணி வாழுமோர் ஏழை நெஞ்சத்தை பாரடி
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும்
தூக்கமில்லை ஏனென்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில்
தீபம் ஏற்றி வைக்க நீ வாவா
மீதி வைத்த கனவை எல்லாம்
பேசி தீர்க்கலாம்….. ஏ ஏ ஏ ஹே
(காற்றைக் கொஞ்சம் …)
நேற்று எந்தன் கனவில் வந்தாய்
நூறு முத்தம் தந்தாயே!
காலை எழுந்து பார்க்கும் போது
கண்ணில் நின்று கொண்டாயே!
பார்த்து பார்த்து எந்நாளும்
பாதுகாத்து என் நெஞ்சை
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணமோடும் தறி கெட்டு
இன்னும் என்ன செய்வாயோ? சொல்லடி!
என்னை இன்று மீட்கத் தான்
உன்னை தேடி வந்தேனே
மீட்டபோதும் நான்
உன்னுள் தொலைகிறேன்……. ஹே…ஹே!
பாடல்: முதல் முறை பார்த்த ஞாபகம்
பாடியவர்: சுனிதி சௌகான்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
(முதல் முறை)
நீந்தி வரும் நிலாவினிலே, ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே, நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதிலென பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடமில்லையே
காதலென்றால் வெறும் காயங்களா? – அது
காதலுக்கு அடையாளங்களா?
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
நீ தானே என் பொன்வசந்தம் வசந்தம், வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
பாடல்: சாய்ந்து சாய்ந்து
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே
விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே
என் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி
உன்னைக் கண்டு கொண்டேனே
ஓஹோ!
என் தந்தை-தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
அழகான உந்தன் மாக்கோலம்
அதைக் கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து இந்த கோலம் இடும்
உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்……!
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே
கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்கள்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்
என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்
(சாய்ந்து சாய்ந்து)
பாடல்: பெண்கள் என்றால்…
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?
பெண்களின் காதலின் அர்த்தமினி
புல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப்போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஓ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஓ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே நெஞ்சமொரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?
இதற்கு தானா ஆசை வைத்தாய்?
இதயம் கேட்குதே!
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று சொல்லுதே!
மதிகெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள் என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள் பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்
(பெண்கள் என்றால்……)
பாடல்: என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்…!
பாடியவர்: கார்த்திக்
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்
அஹ்ஹஹ்ஹா
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி நீ சாய்வது
என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவது போல நடிப்பது
எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி
சின்னப் பிள்ளை போல நீ
அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை எல்லாம்
எண்ணி சொல்லிக் கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்
என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே!
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே!
உன்னுடைய கையாலே தண்டனையே
தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே!
கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தால் வேணுமடி!
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன பின்பும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே!
(என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்…)
பாடல்: சற்று முன்பு பார்த்த
பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய்யென்று சொல்வாயா?
ஓ ஓ……….
(சற்று முன்பு……)
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா!
தூங்கப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா!
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா!
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா!
தாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…
(சற்று முன்பு…)
சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா?
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
பாடல்: புடிக்கல மாமு!
பாடியவர்கள்: சூரஜ் ஜகன், கார்த்திக், மற்றும் குழுவினர்
புடிக்கல மாமே! படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொறத்துது நாலேஜ்
அறுக்குது புக்ஸு அலறுது டீன் ஏஜ்
சீக்கிரம் வந்திடும் நமக்கு ஓல்ட் ஏஜ்
சிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் புக்ஸ்ச எடைக்கு போடுடா லாபம்
நான் tension ஆகிட்டேன் bucketடு bucketடு
tourக்கு எடுங்கடா ticketடு ticketடு
ஹே……………………………………………
புடிக்கல மாமே!
என் வார்த்த நீ கேட்டு
வெட்டு வெட்டு கல்வெட்டு
ஏயே….
எங்கேயும் chilloutடு இல்லையினா getoutடு
ஹே ஹே….
girlsசு நாம்ம classசில் இல்ல
என்ற போதும் தப்பில்ல !
singleலான boyசுக்குத்தான்
workout ஆகும் மாப்பிள்ள!
நான் எறிஞ்ச ball எல்லாம் wicketடு wicketடு
எறங்கி கலக்குடா bucketடு bucketடு
ஹே ஹே……….
(புடிக்கல மாமே!)
உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிக்கும் ஆட்டம்
ஆதிவாசி போல இருக்கட்டும்
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே
மச்சி கடலு மீனுக்கு
கொளத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifeவ நீயும் அனுபவிக்க
வயசு பத்தாதே
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே!
தடக்கு தடக்கு ரயில
போல வருஷம் ஓடுமடா
நீ படுத்து படுத்து எழுந்துபாரு
நிமிஷம் ஓடுமடா
தடக்கு…..
எடக்கு மடக்கு இல்லையிநா
எளமை எதுக்குடா
நீ குறுக்கு நெடுக்கு மடக்கலைனா
உடம்பு எதுக்குடா
படிக்குற பாடம் போதாதடா
தெருவில் இறங்கி நீ படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் இடத்த புடிடா
நம்ம திசையில பார்த்து
சுத்து அடிக்குது காத்து
ஹே உலுக்கி உலுக்கி
முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
அட வீதி பத்தாதே|
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே
பாடல் காட்சிகளையோ, பாடல் வரிகளின் அதிகாரப்பூர்வ (!) காணொளியையோ காண இங்கே செல்லலாம்.
பிழைகள், திருத்தங்கள், கருத்துகளுக்கு செவி மடுக்க எப்போதும்போல ஆர்வத்தோடு உள்ளோம்.
நன்றியோடு,
இசைப்பா குழுவினர்
Rate this:
11/09/2013 தமிழ் இளையராஜா ,
கார்த்திக் , சூரஜ் ஜெகன் , திரைப்பாடல்கள்,
நா.முத்துக்குமார்
புடிக்கல மாமு!
வணக்கம்.
நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது எட்டாம் பாடல் (இறுதிப் பாடல்).
பாடலின் துவக்கமே இப்படி இருந்ததாலோ என்னவோ, எனக்கு முதலில் இந்த பாடல் கேட்ட மாத்திரத்தில் பிடிக்கவில்லை. இந்தப் பாடலை இசையமைக்க இளையராஜா எதற்கு? என்றெல்லாம் கூட சிலர் என்னிடம் கூறினர். எனக்கும் அப்படியே பட்டது. முழுதாகப் பொறுமையாகப் பாடலைக் கேட்டேன். பாதியிலேயே உற்சாகம் மேலிடத் துவங்கியது. அதுதான் ராஜா! பாடல் திடீரென இரண்டாகப் பிரிந்து வேறொரு இசையில் வசீகரிக்கும். உற்சாகமூட்டும். முதல் பாதி சூரஜ் ஜகன் மற்றும் குழுவினர் பாடியது. அதில் ஒன்றும் (எனக்கு) புதிதாகப்படவில்லை. ஆனால் இரண்டாம் பாதிக்கு எங்கிருந்து அந்த உற்சாகம் வந்ததோ தெரியவில்லை. அதிலும் நம்ம ஊர் வாத்தியங்கள் ஏதும் இல்லாமல், அந்த beat வந்திருக்கும். வரிகளும், இசையும் கைப்பிடித்து நடக்கும் இப்பாடலின் இரண்டாம் பாதிக்காகவே பாடலை ரசிக்கலாம். அதிலும் வாத்தியங்கள் மூலமே குறும்பு தெறிக்கும் இசை உங்களையும் எழ வைக்கும். மொத்த பாடலும் முடிந்தபின் வயலினில் ஒரு இசை தெறிக்கும்… வாவ்! எப்படி வேண்டுமானாலும் பாடலை படமாக்கியிருக்கலாம். எனவே அதெல்லாம் தவிர்த்து இப்பாடல் பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாகிப் போனதில் ஆச்சர்யங்கள் இல்லை. அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளின் பிரயோகம் உள்ளது. சிலவற்றை அப்படியே தந்துள்ளோம். பாடல் ஒருவேளை புதிதாகக் கேட்கப்போகிறவர்களுக்குப் பிடிக்கலாம். பிடித்தவர்கள் ரசிக்கலாம்.
amu - Neethaane En Ponvasantham HD
படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: சூரஜ் ஜெகன், கார்த்திக் மற்றும் குழுவினர்
புடிக்கல மாமே! படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொறத்துது நாலேஜ்
அறுக்குது புக்ஸு அலறுது டீன் ஏஜ்
சீக்கிரம் வந்திடும் நமக்கு ஓல்ட் ஏஜ்
சிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் புக்ஸ்ச எடைக்கு போடுடா லாபம்
நான் tension ஆகிட்டேன் bucketடு bucketடு
tourக்கு எடுங்கடா ticketடு ticketடு
ஹே……………………………………………
புடிக்கல மாமே!
என் வார்த்த நீ கேட்டு
வெட்டு வெட்டு கல்வெட்டு
ஏயே….
எங்கேயும் chilloutடு இல்லையினா getoutடு
ஹே ஹே….
girlsசு நாம்ம classசில் இல்ல
என்ற போதும் தப்பில்ல !
singleலான boyசுக்குத்தான்
workout ஆகும் மாப்பிள்ள!
நான் எறிஞ்ச ball எல்லாம் wicketடு wicketடு
எறங்கி கலக்குடா bucketடு bucketடு
ஹே ஹே……….
(புடிக்கல மாமே!)
உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிக்கும் ஆட்டம்
ஆதிவாசி போல இருக்கட்டும்
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே
மச்சி கடலு மீனுக்கு
கொளத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifeவ நீயும் அனுபவிக்க
வயசு பத்தாதே
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே!
தடக்கு தடக்கு ரயில
போல வருஷம் ஓடுமடா
நீ படுத்து படுத்து எழுந்துபாரு
நிமிஷம் ஓடுமடா
தடக்கு…..
எடக்கு மடக்கு இல்லையிநா
எளமை எதுக்குடா
நீ குறுக்கு நெடுக்கு மடக்கலைனா
உடம்பு எதுக்குடா
படிக்குற பாடம் போதாதடா
தெருவில் இறங்கி நீ படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் இடத்த புடிடா
நம்ம திசையில பார்த்து
சுத்து அடிக்குது காத்து
ஹே உலுக்கி உலுக்கி
முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
அட வீதி பத்தாதே|
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே
அதே குறும்போடு வரிகள் மட்டும்!
இசைப்பா+
இளையராஜா அவர்களின் முதல் ஆல்பம் “How to name it” .
Rate this:
10/09/2013 தமிழ் இளையராஜா ,
திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார் ,
ரம்யா என்.எஸ்.கே
சற்று முன்பு பார்த்த…
வணக்கம்.
நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது ஏழாம் பாடல்.
ஆல்பத்தில் வெளியான பாடல்களிலேயே சிம்பொனியின் வாசம் வீசும் பாடல் இதுதான். பாடகியின் குரலோடு இணைந்து பின் தொடரும் இசைப்பிரவாகம் நம்மை மூழ்கடிப்பதை பாடலின் இறுதியில் உணர முடியும். இயல்பாக சோகத்தைக் குரலில் புதைத்தது போல ஒரு குரல் இப்பாடலில் ஒலிக்கிறது. படம் பார்த்த ஒருவர் சொன்ன கருத்து இது. “படத்தின் மொத்த பலத்தையும் கொண்ட பாடல் இது. இந்த பாடல் இல்லையென்றால், படத்தின் முடிவு அவ்வளவு ஈர்த்திடாது”. காட்சிகளில் காட்டப்படும் சோக உணர்ச்சியை பாடகியின் குரல், மற்றும் இசை மூலமே காட்டிவிடுகிறார்கள். பாடலின் இறுதியில் இன்னும் வேகமாக சிம்பொனி இசையையும், கோரஸ் குரல்களையும் உணர முடியும். மிக இயல்பில் அமைந்த வார்த்தைகள் பாடலின் இன்னொரு பலம்
படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய்யென்று சொல்வாயா?
ஓ ஓ……….
(சற்று முன்பு……)
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா!
தூங்கப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா!
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா!
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா!
தாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…
(சற்று முன்பு…)
சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா?
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
ane En Ponvasantham | HD 5 . 1 Channel
பாடல் வரிகள்:
இசைப்பா+
இளையராஜா அவர்கள் 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதைப் பெற்றிருக்கிறார்.
Rate this:
07/09/2013 தமிழ் இளையராஜா ,
கார்த்திக் , திரைப்பாடல்கள்,
நா.முத்துக்குமார்
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்…!
வணக்கம்.
நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது ஆறாம் பாடல்.
ஆல்பத்தில் வெளிவந்த அனைத்து பாடல்களிலும், பெரும்பாலானோரைக் கவர்ந்த இனிய பாடலென்று இதைச் சொல்லிவிடலாம். இந்த பாடலைச் சிலாகித்து எக்கச்சக்க பதிவுகள் தமிழ் வலையுலகில் இருக்கும். பாடல்கள் வெளிவரும் முன்பே இந்த பாடலின் prelude-ம் முதல் இரு வரிகளுமாய் சேர்த்து வெளிவந்த படத்தின் டீஸர் யூட்யூபில் ட்ரெண்ட் ஆனது தனிக்கதை. காதலர்களுக்கான மெலடிப் பாடல். அதிலும் பாடல் தொடங்கியதிலிருந்து முடியும்வரை உங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை கொண்ட பாடல். வயலினுக்குள் இப்படி உற்சாகத்தைப் புதைத்த வேறெந்த பாடலாவது இருக்கிறதா? அது தவிர 2-ம் இடையிசையின் ஒலிநயம் அட்டகாசம்! பாடலை காலாகாலத்திற்கும் கொண்டாடும்படி படைத்திருப்பது ராஜாவின் திறமை. பழைய பாடல்களைப் போல அமைந்திருப்பதாயும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனாலும் இதன் வசீகரத்தன்மை மற்றவற்றைக் காட்டிலும் அலாதியானது. இதே ஆல்பத்தில் பாடகர் கார்த்திக் பாடிய இன்னொரு பாடல் இது.
பாடலின்று சில துளிகள்:
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கனுமே
படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: கார்த்திக்
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்
அஹ்ஹஹ்ஹா
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி நீ சாய்வது
என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவது போல நடிப்பது
எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி
சின்னப் பிள்ளை போல நீ
அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை எல்லாம்
எண்ணி சொல்லிக் கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்
என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே!
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே!
உன்னுடைய கையாலே தண்டனையே
தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே!
கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தால் வேணுமடி!
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன பின்பும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே!
(என்னோடு வா வா என்று...
நன்றி  இசைப்பா