"விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும் உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்: அருமை - “கெளரி மனோகரி” ராகத்தில் டூயட் மெலோடி.....
பாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நின்று சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்த பாடல்.
"அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு.
மணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.
இந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும், அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கித்திய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும், ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.
இணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும், புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆஹா அற்புதம்...
பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஹம்மிங்குடன் அழகு....இந்தப் பாடலில் அவர் பாடும் விதம், மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்..
இதோ உங்களுக்காக!
பாடல்:அதிகாலை நிலவே
திரைப்படம்:-உறுதி மொழி-1990
இசை:- இளையராஜா; இயற்றியவர்:-ஆர் வி உதயக்குமார் ;
பாடியவர்:ஜெயசந்திரன்,S.ஜானகி
~~~~~~~~~~~~~~~~
*பாடல் வரிகள்:* *ஆண்...* அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
*பெண்...* இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..
அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீ பாடவா
🎼🎹🥁🎸🎷🎺🎻
*ஆண்...* மணி குருவி உனை தழுவ மயக்கம் பிறக்கும்
*பெண்...* பருவ கதை தினம் படிக்க கதவு திறக்கும்
*ஆண்...* மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
*பெண்....* பருவ கதை தினம் படிக்க கதவு திறக்கும்..
*ஆண்...* விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
*பெண்...* உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
*ஆண்...* நமை வாழ்த்த வழிதேடி தமிழும் தலை குனியும்
*பெண்...* அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீ பாடவா
*ஆண்...* இசை தேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே
உயிரே..
அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
🎼🎹🥁🎸🎷🎺🎻
*பெண்...* அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
*ஆண்...* ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு
*பெண்...* அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
*ஆண்...* ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு
*பெண்...* தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன்
என் உயிரே..
*ஆண்....* இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன்
என் உயிரே..
*பெண்...* சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்
*ஆண்...* அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
*பெண்....* இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..
அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீபாடவா..
No comments:
Post a Comment