கண்ணன் ஒரு கைக் குழந்தை.... அப்படியே இதயத்தை கரைத்த பாடல்.
1976 இல் இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசை அமைத்த கையோடு சூட்டோடு சூடாக வெளிவந்த படங்களில் பத்ரகாளியும் ஒன்று ... இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நெஞ்சம் எதனாலோ நெகிழ்ந்துவிடுகிறது , தாய் பாடாத ஒரு தாலாட்டு , ஒரு தாலாட்டை காதல் பாடலாக இசை அமைத்த ராஜா....
முதன் முதலாக ஜேசுதாஸ் இளையராஜாவுக்கு பாடிய பாடலிது .. பி . சுசீலாவிற்கு ராஜாவிடம் இருந்து கிடைத்த இரண்டாவது பாடல். இந்த பாடலில் ஜேசுதாசும் சுசீலாவும் கண்ணன் எனும் கைக்குழந்தையை மாறி மாறி தாலாட்டி சீராட்டி, கொஞ்சி குலவி அஹா என்ன ஒரு அற்புதமான பாடல். இந்த பாடலை கேட்டு கேட்டு ரசித்தாலே போதும், அவ்வளவு வித்தியாசமான இசை
இப்பாடலுக்கு இழைந்து இழைந்து வரும் பேஸ் கிடாரை வாசித்தவர் கீ போர்டு புகழ் "விஜி மேனுவல்". முதல் சரணத்தில் வீணையை கொஞ்சிக்கொண்டு ஓடும் அந்த குழலை வாசித்தவர் ராதாகிருஷ்ணன். பேஸ் கிடாரையும், வீணையையும் தொட்டு தொட்டு விளையாடும் அந்த தபேலாவை வாசிப்பது கண்ணையா. எழுதியது வாலி .,. ஆகமொத்தம் இளையராஜா, ஜேசுதாஸ், சுசீலா, வாலி , விஜி மேனுவல், கண்ணையா, ராதா கிருஷ்ணன், வீணை காயத்ரி என்று அத்தனை சாதனையாளர்களையும் கொண்டு வந்து ஒரு புள்ளியில் சேர்த்த பாடல் இது .
சரணத்தில் முதல் வரியை
*உன் மடியில்* *நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம்* *செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*
ஒரு மெட்டில் பாடி ஜேசுதாஸ் முடித்தவுடன்,
அதே வரியை மீண்டும் வேறு மெட்டில்
*உன் மடியில் நானுறங்ககண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*
சுசீலா பிரித்து பிரித்து பாடியாகவேண்டும்.இரண்டுமே வேறு வேறு திசையில் இருப்பது போல இருக்கும் , ஆனால் இரண்டு மெட்டையுமே ஒரே தபேலாவின் சீரான வாத்தியகட்டிலும், பாடகர்களின் திறமையான தேர்விலும், அவர்களை பாடவைத்ததில் ராஜாவின் சாதனை.
கவிஞர் வாலி வரிகளை பாருங்களேன் .. என்ன ஒரு கவிநடை *ஏழ் பிறப்பும்* *இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா*
எந்த ஒரு மொழியிலும் இல்லாத தனி சிறப்பு நம் தமிழ் பாடலில்களுக்கு உண்டு, வார்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பாடல், கேட்கும்போது நினைவுகள் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சிறக்கிட்டு செல்கின்றது.
இசை மழையில் இதமான ராகம்-இதோ உங்களுக்காக!
*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*
பாடல்:கண்ணன் ஒரு
திரைப்படம்:பத்ரகாளி
இசை:- இளையராஜா; இயற்றியவர்: வாலி; பாடியவர்:ஜேசுதாஸ், சுசிலா
~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் பாடுகின்றேன்
ஆராரோ மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
(கண்ணன் ஒரு கை குழந்தை)
உன் மடியில் நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ
உன் மடியில் நானுறங்க
கண்ணிரெண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா
(கண்ணன் ஒரு கை குழந்தை )
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ
அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி
மஞ்சள் கொண்டு நீராடி
மைகுழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பட கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா
(கண்ணன் ஒரு கை குழந்தை)
ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரிரோ..
* இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றொரு இனிய பாடலுடன் *
No comments:
Post a Comment