Sunday, 18 March 2018

சிகப்பு ரோஜாக்கள் - இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது...


சிகப்பு ரோஜாக்கள் - இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது...

🎞 திரைப்படம் :  *சிகப்பு ரோஜாக்கள் (1978)*
பாடல் : *மின்மினிக்கு கண்ணில்*
🎙 பாடலை பாடியவர்கள்  : *மலேஷியா வாசுதேவன் எஸ். ஜானகி*
🎙 மொழி: *தமிழ்* 
🎼 இசையமைப்பு : *இளையராஜா*
🎬 இயக்குனர் : *பி. பாரதிராஜா*
✍பாடலை எழுதியவர் : *கண்ணதாசன்*


*பாடல் வரிகள் :*

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே… அழகு பென்னே…
காதல் ராஜாங்க பரவை
தேடும் ஆனன்த உறவை
சொர்க்கம் என் கையிலே

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா… அழகு கண்ணா…
காதல் ராஜாங்க பரவை
தேடும் ஆனந்த உறவை
சொர்கம் என் கையிலே…
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்
இந்தக்கடல் பல கங்கை நதி வந்து
சொந்தம் கொண்டாடும் இடம்
என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
ன..ன…ன…ன…
அடி என்னடி உனக்கிந்த அவசரம்
னன….னன….னன….னனன….
இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா…
என்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…
னா..னா…னா…னா..
இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்…
னனனனனனனனா
இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


Wednesday, 18 October 2017

அழகிய கண்ணே உறவுகள் நீயே



அழகிய கண்ணே உறவுகள் நீயே....

அழகிய கண்ணே உறவுகள் நீயேநீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே (அழகிய)

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்திரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா (அழகிய)

.சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான் (அழகிய)

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது (அழகிய)

Tuesday, 12 September 2017

கண்ணன் ஒரு கைக் குழந்தை.... அப்படியே இதயத்தை கரைத்த பாடல்.



கண்ணன் ஒரு கைக் குழந்தை.... அப்படியே இதயத்தை கரைத்த பாடல்.

1976 இல் இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசை அமைத்த கையோடு சூட்டோடு சூடாக வெளிவந்த படங்களில் பத்ரகாளியும் ஒன்று ... இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நெஞ்சம் எதனாலோ நெகிழ்ந்துவிடுகிறது , தாய் பாடாத ஒரு தாலாட்டு , ஒரு தாலாட்டை காதல் பாடலாக இசை அமைத்த ராஜா....

முதன் முதலாக ஜேசுதாஸ் இளையராஜாவுக்கு பாடிய பாடலிது .. பி . சுசீலாவிற்கு ராஜாவிடம் இருந்து கிடைத்த இரண்டாவது பாடல். இந்த பாடலில் ஜேசுதாசும் சுசீலாவும் கண்ணன் எனும் கைக்குழந்தையை மாறி மாறி தாலாட்டி சீராட்டி, கொஞ்சி குலவி அஹா என்ன ஒரு அற்புதமான பாடல். இந்த பாடலை கேட்டு கேட்டு ரசித்தாலே போதும், அவ்வளவு வித்தியாசமான இசை

இப்பாடலுக்கு இழைந்து இழைந்து வரும் பேஸ் கிடாரை வாசித்தவர் கீ போர்டு புகழ் "விஜி மேனுவல்".  முதல் சரணத்தில் வீணையை கொஞ்சிக்கொண்டு ஓடும் அந்த குழலை வாசித்தவர் ராதாகிருஷ்ணன். பேஸ் கிடாரையும், வீணையையும் தொட்டு தொட்டு விளையாடும் அந்த தபேலாவை வாசிப்பது கண்ணையா. எழுதியது வாலி .,. ஆகமொத்தம் இளையராஜா, ஜேசுதாஸ், சுசீலா, வாலி , விஜி மேனுவல், கண்ணையா, ராதா கிருஷ்ணன், வீணை காயத்ரி  என்று அத்தனை சாதனையாளர்களையும் கொண்டு வந்து ஒரு புள்ளியில் சேர்த்த பாடல் இது .

சரணத்தில் முதல் வரியை
*உன் மடியில்* *நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம்* *செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*

ஒரு மெட்டில் பாடி ஜேசுதாஸ் முடித்தவுடன்,
அதே வரியை  மீண்டும் வேறு மெட்டில்

*உன் மடியில் நானுறங்ககண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*
சுசீலா பிரித்து பிரித்து பாடியாகவேண்டும்.இரண்டுமே வேறு வேறு திசையில் இருப்பது போல இருக்கும் , ஆனால் இரண்டு மெட்டையுமே ஒரே தபேலாவின் சீரான வாத்தியகட்டிலும், பாடகர்களின் திறமையான தேர்விலும், அவர்களை பாடவைத்ததில் ராஜாவின் சாதனை.

கவிஞர் வாலி வரிகளை பாருங்களேன் .. என்ன ஒரு கவிநடை *ஏழ் பிறப்பும்* *இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா*

எந்த ஒரு மொழியிலும் இல்லாத தனி சிறப்பு நம் தமிழ் பாடலில்களுக்கு உண்டு, வார்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பாடல், கேட்கும்போது  நினைவுகள் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சிறக்கிட்டு செல்கின்றது.

இசை மழையில் இதமான ராகம்-இதோ உங்களுக்காக!

*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*

பாடல்:கண்ணன் ஒரு
திரைப்படம்:பத்ரகாளி
இசை:- இளையராஜா;  இயற்றியவர்: வாலி; பாடியவர்:ஜேசுதாஸ், சுசிலா
~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் பாடுகின்றேன்
ஆராரோ மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
(கண்ணன் ஒரு கை குழந்தை)

உன் மடியில் நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ

உன் மடியில் நானுறங்க
கண்ணிரெண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா
(கண்ணன் ஒரு கை குழந்தை )

கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ

அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மைகுழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பட கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா
(கண்ணன் ஒரு கை குழந்தை)

ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரிரோ..

* இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றொரு இனிய பாடலுடன் *

Tuesday, 29 August 2017

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா"


"விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும் உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்: அருமை - “கெளரி மனோகரி”  ராகத்தில் டூயட் மெலோடி.....

பாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நின்று சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்த பாடல்.

"அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு.

மணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.

இந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும், அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கித்திய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும், ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.

இணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும், புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆஹா அற்புதம்...

பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஹம்மிங்குடன் அழகு....இந்தப் பாடலில் அவர் பாடும் விதம், மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்..

இதோ உங்களுக்காக!

பாடல்:அதிகாலை நிலவே
திரைப்படம்:-உறுதி மொழி-1990
இசை:- இளையராஜா;  இயற்றியவர்:-ஆர் வி உதயக்குமார் ;
பாடியவர்:ஜெயசந்திரன்,S.ஜானகி
~~~~~~~~~~~~~~~~
*பாடல் வரிகள்:* *ஆண்...* அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
*பெண்...* இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..

அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீ பாடவா

🎼🎹🥁🎸🎷🎺🎻

*ஆண்...* மணி குருவி உனை தழுவ மயக்கம் பிறக்கும்
*பெண்...* பருவ கதை தினம் படிக்க கதவு திறக்கும்
*ஆண்...* மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
*பெண்....* பருவ கதை தினம் படிக்க கதவு திறக்கும்..

*ஆண்...* விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
*பெண்...* உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
*ஆண்...* நமை வாழ்த்த வழிதேடி தமிழும் தலை குனியும்

*பெண்...* அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீ பாடவா
*ஆண்...* இசை தேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே
உயிரே..
அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா

🎼🎹🥁🎸🎷🎺🎻

*பெண்...* அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
*ஆண்...* ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு
*பெண்...* அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
*ஆண்...* ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு

*பெண்...* தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன்
என் உயிரே..
*ஆண்....* இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன்
என் உயிரே..
*பெண்...* சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்

*ஆண்...* அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
*பெண்....* இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..
அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நீபாடவா..



Sunday, 27 August 2017

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு



இன்றைய இசையமுது...#HBD #RAJKIRAN SIR

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு
கொண்டாந்து தாரேன் நல்ல மாங்காய் பிஞ்சு (வீணை)

தங்கம் வைரம் எல்லாம் வயிற்றில் சுமந்திடும் தங்கமே
இந்த செல்வம் போதும் இனியும் நமக்கென்ன பஞ்சமே
புள்ளதாச்சி உன்னைப் போலே அதிர நடப்பது ஆகுமா
கண்ணை மூடி கவலை நீங்கி எனது மடியினில் தூங்கம்மா

தாயாக போகுமுன்னே தாலாட்டுப் பாடும் அன்னை
நானன்றி வேறு இங்கு யாரம்மா
நானன்றி வேறு இங்கு யாரம்மா......(வீணை)

ரோசா நாத்து நீயும் கரிசல் நெலத்துல வாடுறே
ராசா வீட்டுப் பொண்ணு
வறுமை சிறையிலே வாழுற
மண்ணின் வாசம் மனசில் வீசும்

பொறுமை உடையவள் நீயம்மா
உன்னைப் பார்த்து உருகிப் போச்சு
இரும்பு மனசொன்னு பாரம்மா
ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு எந்நாளும் துன்பப்பட்டு
வேறென்ன கண்ட தாயி என்னிடம்
வேறென்ன கண்ட தாயி என்னிடம்

வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட இங்கு வந்து சேர்ந்தது
விளையாடி வேதனையை தீர்க்குது
தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு
தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு (வீணை)

Friday, 25 August 2017

அன்புள்ள ரஜினிகாந்த் - தேன் பூவே பூவே வா

திரைப்படம்       : #அன்புள்ள_ரஜினிகாந்த்
இசையமைப்பு : #இளையராஜா
பாடலாசிரியர்  : #வாலி
பாடகர்        : #எஸ்_பி_பாலசுப்ரமணியம்
பாடகி         : #எஸ்_ஜானகி            
பாடல்         : #தேன்_பூவே_பூவே_வா
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
ஆண் :
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

இசை                                       சரணம் - 1

ஆண் :
பனி விழும் புல் வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்

பெண் : கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்

ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

பெண் : ஹோ... கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

ஆண் : தேவ தேவி என்னோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

ஆண் : பூந்தேனே தேனே வா தாகம் கூட

இசை                                    சரணம் - 2

பெண் : இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்

ஆண் : அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்

பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும் போது

ஆண் : ஆ... ஹஹஹ காதல் யோகம் தான் கட்டில் மீது

பெண் : காண வேண்டும் உன்னோடு தான்

ஆண் :
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

பெண் :
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா

பெண் : லால்ல லால்லா...

இருவர் : லா... லால்லா லால்லா லா லால்ல லால்லா...

Sunday, 20 August 2017

திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்



திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்

ஜானகி அம்மாவின் பாடல்களிலேயே மிக உன்னதமானது இந்த பாடல். கேட்கும் ஒவ்வொரு  முறையும் மனம் நிர்மலமான நிலையை அடைந்து விடுகிறது. சோக ரசத்தை இந்த அளவு அனுபவித்து பாடிய பிறிதொரு பாடல் தமிழில் இல்லை. ராஜாவின் மேன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி.

எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார்.

"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். இந்த இரு பாடல்களும் ஒரே ராகம் .

பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து

"தூரத்தில் நான் கண்ட உன் முகம் ; நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.

பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.

"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.

தூரத்தில் நான் கண்ட உன் முகம் :ஒரு சோக கீதம் ;இதோ உங்களுக்காக!



பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்
திரைப்படம்:- நிழல்கள்-1980; இசை:- இளையராஜா; பாடலாசிரியர்:- பஞ்சு அருணாச்சலம்; பாடியவர்:- S.ஜானகி, கதை, வசனம்:- மணிவண்ணன்; இயக்குனர்:- P. பாரதிராஜா.
~~~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேங்குழல் நாதமும் கீதமும் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் என்னும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா...
மீரா...மீரா...மீரா...மீரா...மீரா..
வேளை வரும்போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்

இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைனவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் அறிந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்.